Sri Nadarajar Temple

ஆலயத்தின் வரலாறு

அருள்மிகு நடராஜர் பரிபாலன சபா 1930களில் நிர்மாணிக்கப்பட்டது. ஆதிகாலத்தில் இ‌ங்கு வழிபாடுகள் மட்டுமே நிகழ்ந்து வந்தது. நாளடைவில் தஞ்சம் அடைந்த பக்தர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் இக்கோவிலின் கட்டமைப்பு விரிவ செய்யபட்டது. இக்கோவிலில் மூலவராக விற்றிரூபவர் எல்லாம்வல்ல நடராஜர பெறுமான் ஆவர். சைவர்களின் கடவுளான, மும்மூர்த்திகளில் ஒருவரான சிவா பெருமானின் இன்னொரு தோற்றமே நடராஜர் ஆவர். நடராஜர் என்பது நடன கலைகளுக்கு எல்லாம் அரசனாக விளங்குபவர் என பொருள். நடராஜரின் நடனம் தாண்டவம் என்றும் அழைக்கப்படும். இந்த தோற்றத்தில் சிவா பெருமானின் ஆனந்த தாண்டவமானது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தத்துவங்களை எடுத்துரைக்கிறது. மேலும், நடராஜர் ,  தாளத்தைக் குறிக்க உடுக்கை, அழிவைக் குறிக்க நெருப்பு, உறுதியை குறிக்க அபய முத்திரையும், முக்தியை குறிக்க உயர்த்தப்பட்ட பாதம் உட்பட பல்வேறு அடையாளப் பொருட்களை பல கரங்களில் உயர்த்தியபடி சித்தரிக்கப்படுகிறார். நடராஜரின் நடனம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் மற்றும் ஆற்றல் தொடர்பான பிரபஞ்ச சக்தியை குறிக்கிறது. நடராஜர் கலை, இசை மற்றும் தர்மத்தின் மறு உருவமாக போற்றப்படுகிறார். சிவா பெருமானின் இந்த ரூபம் நடனத்தின் அழகையும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்துகின்றன.

Scroll to Top