வருங்கால திட்டம்
சமைய வகுப்பு
இளைய தலைமுறையினருக்கு இலவச சமைய வகுப்பு வழங்கப்படும். பெற்றோர்களின் சுமையை குறைக்கும் வகையில் குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்ப போக்குவரத்து, சிற்றுண்டி மற்றும் வகுப்பு பணித்தாள் அனைத்துமே ஆலயத்தால் இலவசமாக ஏற்பாடு செய்யப்படும்.


திருமண வாழ்க்கை நெறிகளும் குழந்தை வளர்ப்பு வகுப்புக்கள்
நாங்கள் திருமணத்தை சிறப்பாக தொடங்க விரும்பும் எந்த ஜோடிகள் அல்லது திருமண வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் திருமண வயதில் இருக்கும் எவரேனும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தம்பதிகள் நீடித்த திருமண பந்தத்தில் ஈடுபட சிறந்த அடித்தளத்தையும் அமைக்கும் வகையில் இந்த பயிற்சி வகுப்பின் தலைப்புகள் வடிவமைக்க பட்டுள்ளது. மேலும், பெற்றோர்களாகியவர்கள் குழந்தைகள் வளர்க்கும் வகுப்பிலும் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்பதனால் குடும்ப பொறுப்புகளையும் பணி சுமையையும் சமச்சீர் செய்து சிறப்பான குடும்ப வாழ்க்கை வழிநடத்த உறுதுணையாக இருக்கும். இதன் மூலம் பெற்றோர்கள் குடும்பத்தின் மதிப்புகளையும் நேர நிர்வாகத்தையும் கற்று கொண்டு சிறந்த பெற்றோர்களாக இயலும்.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற்ற அனைவருக்கும் வகுப்பின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழர் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கிய போதனை
தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தினமும் தமிழர் வரலாறு, பண்பாடு, இலக்கியம் ஆகியவை தினமும் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நமது தமிழர் பாரம்பரியங்கள் வரும் சங்கதியினரால் மறக்கபடாமல் இருக்க மேம்பாடு செய்யபட்டுள்ளது. அவை;
- பரதநாட்டியம்
- பல்லாங்குழி
- கபடி
- சிலம்பம்
- கரகாட்டம்
- ஒயிலாட்டம்
- பொய்கால் குதிரை
- மயிலாட்டம்
இந்த பாரம்பரிய கலாச்சாரத்தை இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதால், இவை அழிவின்றி நீடித்து இருக்கும் என பெரிதும் நம்புகிறோம்.


ஆலய மண்டபம் பல நிகழ்வுக்காக வாடகைக்கு கொடுக்க படும்
பின்வரும் நிகழ்வுகளுக்கு ஆலய மண்டபம் மிகவும் குறைந்த பட்சம் கட்டணத்தில் வாடகைக்கு வழங்க படும்;
- தன்முனைப்பு நிகழ்வுகள்
- இளைஞர்களுக்குகாக குழு உருவாக்க பயிற்சிகள்
- அனைத்து நிலை மாணவருக்கும் பிரத்தியேக வகுப்பு வழங்க படும்
- இந்து மத அடிப்படையில் சிறார் பள்ளி நடத்தப்படும்
- பெண்களுக்காக வீட்டில் இருந்த செய்யும் சிறு தொழில் வகுப்புக்கள்
- சைவ சமய தொடர்பான அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆலய மண்டபம் இலவசமாக வழங்கப்படும்